’அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ - 'டான்’ படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்

’அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ - 'டான்’ படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்

’அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ - 'டான்’ படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்
Published on

’டான்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை போனில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 13-ம் தேதி தியேட்டரில் வெளியான ‘டான்’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடெக்ஷன்ஸ் மற்றும் லைக்கா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திர்ந்தார்.

பள்ளி, கல்லூரி கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை, தமிழகத்தில் ரூ.65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’டாக்டர்’ படம் ‘வருண் டாக்டர்’ என்று தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டது போலவே ‘காலேஜ் டான்’ என்ற பெயரில் ‘டான்’ தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.

நேற்று ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குச் சென்ற சிவகார்த்திகேயன் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் “’டான்’ பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் போன் செய்தார். ’சிறப்பாக நடித்திருந்தீர்கள். கடைசி 30 நிமிடங்கள் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று பாராட்டினார். சூப்பர் ஸ்டாரின் பாராட்டு எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார். ஹைதராபாத் சென்றுள்ள சிவகார்த்திகேயன் அங்குள்ள தியேட்டர்களில் ரசிகர்களுடன் அமர்ந்து ‘டான்’ பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com