ரஜினியுடன் புகைப்படம் எடுக்க ஐடி வேணுமாம்!

ரஜினியுடன் புகைப்படம் எடுக்க ஐடி வேணுமாம்!
ரஜினியுடன் புகைப்படம் எடுக்க ஐடி வேணுமாம்!

ரசிகர் மன்ற அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மே 15 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் ரஜினிகாந்த். இதற்கான ஏற்பாடுகள் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.

ரஜினியுடன் புகைப்படம் எடுக்க, மாவட்ட வாரியாக, மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் சுதாகர் இன்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com