இயக்குநர் குமாரராஜாவுக்கு நன்றி - விஜய் சேதுபதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்த ட்வீட்

இயக்குநர் குமாரராஜாவுக்கு நன்றி - விஜய் சேதுபதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்த ட்வீட்

இயக்குநர் குமாரராஜாவுக்கு நன்றி - விஜய் சேதுபதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்த ட்வீட்
Published on

தனது நடிப்பு திறமைக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்தப் படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, இயக்குநர் குமாரராஜாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அதேபோல், ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில், பகத் ஃபாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். நீரவ் ஷா, பி.எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்திருந்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்ததால், மிகுந்த எதிர்பார்ப்புடன், கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பட விமர்சர்கள் உட்பட பலரின் பாராட்டுக்களையும், சர்வதேச அளவில் பல விருதுகளையும் இந்தப் படம் பெற்றிருந்தது.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே சவாலான கதாபாத்திரத்தில் தங்களது நடிப்பை திறம்பட வெளிக்காட்டியிருந்தனர். குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி மூன்றாம் பாலினத்தவராக நடித்த ‘ஷில்பா’ கதாபாத்திரம் அதிகளவில் பேசப்பட்டது. சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் படும் துயரங்களை, நடிகர் விஜய் சேதுபதி தனது நடிப்பின் மூலம் அசத்தலாக வெளிப்படுத்தியிருப்பார்.

இதனால் முதன் முதலாக, நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நடிகருக்கான தேசிய விருது வாங்கி கொடுத்தது இந்தப் படம் தான். இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை நினைவுகூரும் விதமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிற்கு நன்றி தெரிவித்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com