தெலுங்கில் ஓடிடியில் வெளியாகும் ‘சூப்பர் டீலக்ஸ்’
இயக்குநர் தியாகராஜன் குமாரஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் தெலுங்கில் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ’சூப்பர் டீலக்ஸ்’விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார். இதற்காக, விஜய் சேதுபதிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. நடிகர் ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். அப்போதே, இந்தப் படம் இந்திய அளவில் கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட ’சூப்பர் டீலக்ஸ்’படம் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தெலுங்கின் பிரபலமான ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்தான், விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்த ’உப்பெனா’ சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.