சர்வதேச திரைப்படவிழாவில் விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'

சர்வதேச திரைப்படவிழாவில் விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'

சர்வதேச திரைப்படவிழாவில் விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படவுள்ளது.

தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சமந்தா, ஃபஹத் ஃபாசில், காயத்ரி, மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பி.எஸ் வினோத், நீர்வ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 'ஆரண்ய காண்டம்'  படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த தியாகராஜன் குமாரராஜா, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தை எடுத்துள்ளார். இப்படம் விமர்சக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.  

இந்நிலையில், இத்திரைப்படம் வரும் 27 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை கொரியாவில் நடைபெறவுள்ள போய்ஷன் சர்வதேச ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. வேர்ல்ட் ஃபெண்டாஸ்டிக் ப்ளூ என்ற பிரிவில் இத்திரைப்படம் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இவ்விழாவில் அந்தாதுன், கல்லி பாய் ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்பட இருக்கிறது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com