நாயகியாக சன்னி லியோனியின் முதல் தமிழ் படம்: ‘ஷீரோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நாயகியாக சன்னி லியோனியின் முதல் தமிழ் படம்: ‘ஷீரோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நாயகியாக சன்னி லியோனியின் முதல் தமிழ் படம்: ‘ஷீரோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகை சன்னி லியோனி நடிக்கும் ‘ஷீரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

நடிகை சன்னி லியோனி பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்டப் தென்னிந்திய மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில், ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர், சசிக்குமாரின் படத்திலும், இயக்குநர் யுவன் படத்திலும் தற்போது உறுதுணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் உருவாகிவரும் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ‘ஷீரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட, இப்படத்தில் சன்னி லியோனி அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளிப் பெண்ணாக நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

போஸ்டரில் சன்னி லியோனி மிரட்டும் பார்வையுடன் பார்க்கும் பார்வை, படத்தின் நாயகியாக மட்டுமல்லாமல் அவரே எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார் என்றே தோன்ற வைக்கிறது. இது சன்னி லியோனி நாயகியாக நடித்துள்ள முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com