\
தென்னிந்திய கலாச்சாரம் எனக்குப்  பிடித்துள்ளது: சன்னி லியோன்

தென்னிந்திய கலாச்சாரம் எனக்குப் பிடித்துள்ளது: சன்னி லியோன்

தென்னிந்திய கலாச்சாரம் எனக்குப் பிடித்துள்ளது: சன்னி லியோன்
Published on: 

தமிழில் நான் நடிக்கும் சரித்திரப் படம் ஒரு நடிகையாக எனது வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என நடிகை சன்னிலியோன் தெரிவித்துள்ளார். 

பாலிவுட் நடிகையான சன்னி லியோன் தமிழில் ஒரு  படத்தில் நடித்து வருகிறார். வீரமாதேவி என பெயரிட்டுள்ள அந்தப் சரித்திரப் படத்தில் இளவரசியாக நடிக்கிறார். இதற்காக வாள்சண்டை, குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழில் நடிக்கும் சரித்திரப் படம் ஒரு நடிகையாக எனது வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் மொழி தனக்கு ஒரு பிரச்னையாக இருக்காது எனவும் நம்பிக்கை தெரிவித்தார். வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அது தற்போது நிறைவேறி இருக்கிறது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். 

வீரமாதேவி படத்திற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குதிரையேற்ற பயிற்சிப் பெற்று வருகிறார் சன்னி லியோன். தமிழ்ப் படம் என்பதால் தமிழும் கற்கத் தொடங்கிவிட்டார். தமிழ்ப் படத்தில் நடிப்பதால் தமிழை கற்கவில்லை, எனக்குப் புதிய மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் உண்டு. தென்னிந்தியாவின் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது அதனால் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன். மற்ற மொழிகளிலும் தனக்கு பிடித்தமான கதை கிடைத்தால் நடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com