சன்னி லியோன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சன்னி லியோன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சன்னி லியோன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!
Published on

சன்னி லியோன் நடிப்பில் தமிழில் உருவாகும் சரித்திரப் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது.

உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ள சன்னி லியோன், சரித்திர பின்னணிக் கொண்ட தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்திருந்தாலும்,  தமிழில் இவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் வி.சி வடிவுடையான், மிகவும் பிரமாண்ட வடிவில் இந்தத் திரைப்படம் உருவாகி வருவதாகவும், சரித்திர பின்னணிக் கொண்ட இந்தத் திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது. ‘வீரமாதேவி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப் படத்தின் தலைப்பை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் சன்னி லியோன் நடிக்கும் படத்தில் கடைசி எழுத்து ‘வி’ என ‘க்ளு’ கொடுக்கப்பட்டது. தற்போது அந்த ரகசியம் உடைந்து படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று ட்விட்டர் வலைப்பக்கத்தில் #SunnyLeoneInTamil என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com