‘எங்க குடும்பத்துல கல்யாணம் ஆகறதுக்குள்ள.. சிம்பு, விஷாலுக்கே ஆகிடும்போல’-காஃபி வித் காதல்

‘எங்க குடும்பத்துல கல்யாணம் ஆகறதுக்குள்ள.. சிம்பு, விஷாலுக்கே ஆகிடும்போல’-காஃபி வித் காதல்
‘எங்க குடும்பத்துல கல்யாணம் ஆகறதுக்குள்ள.. சிம்பு, விஷாலுக்கே ஆகிடும்போல’-காஃபி வித் காதல்

சுந்தர் சி இயக்கியுள்ள 'காஃபி வித் காதல்' திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மறைந்த நடிகர் பிரதாப் போத்தன், யோகிபாபு, அம்ரிதா உள்ளிட்ட பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்துள்ள இந்தத் திரைப்படம், வரும் ஏழாம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், 'காஃபி வித் காதல்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரெய்லரில் நாயகர்களின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் குறித்த கலகலப்பான காட்சிகளும், நகைச்சுவையான வசனங்களும் இடம்பெற்றுள்ளன. நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரையிலான நாள்களில் நடக்கும் குழப்பங்களே 'காஃபி வித் காதல்' திரைப்படத்தின் கதை என்று ட்ரெய்லரில் வரும் காட்சிகள் உணர்த்துகின்றன. இயக்குநர் சுந்தர் சி திரைப்படங்களுக்கே உரிய கலகலப்பான காட்சிகளும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com