ஹாக்கி வீரரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

ஹாக்கி வீரரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி
ஹாக்கி வீரரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 

‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் யுடியூப்பில் தனி ஆளாக உருவாகியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் இவரே மீண்டும் தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இப்படத்தை டி.பார்த்திபன் தேசிங்கு இயக்க இருக்கிறார். இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம். ஆகவே பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளனர். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தலைப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் பதிவாகியுள்ளன.  அரவிந்த் சிங், இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com