\
விஜய் ஆண்டனி ஜோடியானார் சுனேனா

விஜய் ஆண்டனி ஜோடியானார் சுனேனா

விஜய் ஆண்டனி ஜோடியானார் சுனேனா
Published on

விஜய் ஆண்டனி இப்போது அண்ணாதுரை, காளி ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார். ’அண்ணாதுரை’யில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதை சுசீந்திரன் உதவியாளர் சீனிவாசன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்தப் படத்தை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இப்போது விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். 
இதற்கிடையே கிருத்திகா உதயநிதி இயக்கும் ’காளி’ படத்திலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் அவர் ஜோடியாக சுனேனா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுபற்றி சுனேனா கூறும்போது, ’விஜய் ஆண்டனி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி. இதில் நான்கு பெண்களில் ஒருவராக நடிக்கிறேன். மேலும் 3 ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்கள். இதற்கு மேல் என் கேரக்டர் பற்றி இப்போது சொல்ல முடியாது. ஆனால் என் கேரக்டர் பவர்புல்லாக இருக்கும்’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com