\
’இறுதிச்சுற்று’ இயக்குநர்  சுதாவுடன் இணையும் சூர்யா

’இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதாவுடன் இணையும் சூர்யா

’இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதாவுடன் இணையும் சூர்யா
Published on


பெரும் வரவேற்பை பெற்ற இறுதிச் சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்குரா அடுத்து சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அதேவேளை தனது  2-டி எண்டர்டெய்ன்மெண்ட்  நிறுவனத்தின் சார்பில் சில படங்களைத் தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் ’இறுதிச்சுற்று’ சுதா கொங்குரா கூறிய கதை சூர்யாவை கவர்ந்ததால் அந்தப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார் சூர்யா. இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இறுதிச் சுற்று படத்திற்கு பிறகு தமிழில் சுதா இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.   
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com