”நேற்று விஜய்.. இன்று அஜித்..யாரை இயக்கப்போகிறார்?” சுதா கொங்கராவை சுற்றும் யூகங்கள்!!

”நேற்று விஜய்.. இன்று அஜித்..யாரை இயக்கப்போகிறார்?” சுதா கொங்கராவை சுற்றும் யூகங்கள்!!
”நேற்று விஜய்.. இன்று அஜித்..யாரை இயக்கப்போகிறார்?” சுதா கொங்கராவை சுற்றும் யூகங்கள்!!

தமிழ் சினிமா மெல்ல எழுந்துவருகிறது. ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு கதை விவாதங்கள், கதை கேட்பது, படப்பிடிப்பு என திரைப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. தற்போது நடிகர் நடிகர் அஜீத், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியுள்ளார் சுகா கொங்காரா. அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், ஹெச். வினோத் இயக்கும் 'வலிமை' படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர், சுதா படத்தில் நடிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே விஜய்யின் 65வது படத்தை சுதா கொங்காரா இயக்குவதாக பேசப்பட்டது. கதையை அவரிடம் சொல்லிவிட்டதாகவும், சில மாற்றங்கள் கேட்டுள்ளதாகவும் பேசப்பட்டது. தற்போது அஜித் படத்தை சுதா இயக்கப்போவதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, அஜித் குமாரை விரைவில் சந்திக்கவுள்ள சுதா கொங்காரா அவரிடம் கதை குறித்து விரிவாக தெரிவிக்க உள்ளார். ஒருவேளை கதை அஜித்திற்கு பிடிக்கும் பட்சத்தில் இந்த கூட்டணி உறுதியாகும். அப்படி இந்த கூட்டணி உறுதியாகுபட்சத்தில் அடுத்த ஆண்டு இறுதியில்தான் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே..இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அர்ச்சனா கல்பாத்தி அதனை மறுத்துள்ளார். அப்படியொரு திட்டம் ஏதுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் புதுப்படம் வரவிருப்பதாக செய்திகள் வெளிவருவதைப் பார்த்தேன். இந்த ஆண்டு நாங்கள் எந்த படத்தையும் தயாரிக்க இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை. அதை ஏஜிஎஸ் சார்பில் தெளிவுபடுத்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சுதா, துரோகி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அவரின் இரண்டாவது படமான 'இறுதிச் சுற்று' பெரும் வெற்றியடைந்து பிரபலமாகப் பேசப்பட்டது. இதனால் நடிகர் சூர்யா நடிப்பில் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் அடுத்த மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com