தாக்கினாரா தனுஷ்... சர்ச்சைப் பதிவை நீக்கினார் சுசித்ரா

தாக்கினாரா தனுஷ்... சர்ச்சைப் பதிவை நீக்கினார் சுசித்ரா
Published on

பலத்த சர்ச்சைக்கு பிறகு,‌ நடிகர் தனுஷ் பற்றிய டுவிட்டர் பதிவை, பிரபல பின்னணி பாடகி சுசித்ரா நீக்கியுள்ளார்.

நள்ளிரவு விருந்து ஒன்றில், நடிகர்கள் சிம்பு,‌ தனுஷ், சுசித்ரா கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக, டுவிட்டரில் சுசித்ரா பதிவு செய்தார். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

தற்போது, தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கவில்லை என்றும், கொண்டாட்டத்தின்போது அப்படி நடந்து விட்டது என்றும் பாடகி சுசித்ரா கூறியுள்ளார். மேலும், தனது டுவிட்டர் கணக்கு‌ மீண்டும் தம்மிடமே வந்துவிட்டதாகவும் சுசித்ரா கூறியுள்ளார். அவரது‌ முந்தைய மற்றும் தற்போதைய டுவிட்டர் பதிவுகள் குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com