\
’பொங்கலுக்கு வரும் ஈஸ்வரன்’ : சுசீந்திரன் -சிம்பு பட ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு

’பொங்கலுக்கு வரும் ஈஸ்வரன்’ : சுசீந்திரன் -சிம்பு பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

’பொங்கலுக்கு வரும் ஈஸ்வரன்’ : சுசீந்திரன் -சிம்பு பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

சிம்புவை கதாநாயகனாக வைத்து சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் என்ற புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மாதவ் மீடியாவின் ஐந்தாவது தயாரிப்பாக சென்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் ரசனைகளுடன் படம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

சிம்புவுக்குப் பொருந்தும் வகையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளதாகவும் ஒரே கட்டமாக படத்தை முடிக்கும் திட்டத்தில் படக்குழு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால் ஆகியோர் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி என பிரபலமான தொழில்நுட்பக் குழுவினரும் கைகோர்த்துள்ளனர். 2021 ம் ஆண்டு பொங்கலில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இன்று வெளியான ஈஸ்வரன் என்ற புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com