அர்னால்ட் நடித்துள்ள சீரிஸ் `FUBAR'. இதன் இரண்டாவது சீசன் வெளியாகிறது. ரகசியமாக சி ஐ ஏவுக்கு வேலை பார்க்கும் தந்தை மகளின் அட்வென்சர் அதிரடிகள் கதை.
கரண் இயக்கத்தில் வெங்கடேஷ், ராணா நடித்த சீரிஸ் `Rana Naidu'. இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. தந்தை மகனுக்கு இடையே நடக்கும் மோதல்களே கதை.
ஆந்தாலஜியாக ஒவ்வொரு வாரமும் வரும் குறும்படத்தின் இந்த வார ரிலீஸ் Dear Daddy. அப்பா மகள் இடையேயான பாசப்பிணைப்பு பற்றி பேசும் படம்.
Michael Pearce இயக்கத்தில் Julianne Moore, Sydney Sweeney நடித்துள்ள படம் `Echo Valley'. தன் மகள் பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொள்ள அதை சரிசெய்ய தாய் முயற்சிப்பதே கதை.
மனுஷவ்ராஜ் இயக்கிய படம் `Padakkalam'. காமிக் புக் மீது ஆர்வம் கொண்ட நால்வர் சிக்கிக் கொள்ளும் ஒரு பிரச்சனை, அதில் இருந்து அவர்கள் வெளியேறுவதே கதை.
காலித் ரஹ்மான் இயக்கத்தில் நஸ்லென் நடித்த படம் `Alappuzha Gymkhana'. இளைஞர்கள் சிலர் அமெச்சூர் பாக்சிங்கில் கலந்து கொள்கிறார்கள். ஏன் எதற்கு என்பதே கதை.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் `டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'. பேயிடம் சிக்கும் இளைஞனின் தப்பிக்கும் முயற்சிகளே கதை.
லோகேஷ் அஜீஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்த படம் `லெவன்'. நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளை செய்வது யார் என்ற விசாரணையே கதை.
கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்ஷய் குமார், மாதவன் நடித்த படம் `Kesari Chapter 2: The Untold Story of Jallianwala Bagh'. ஜாலியன் வாலாபாக் பற்றிய உண்மைகளை கொண்டு வர போராடும் ஒரு வக்கீலின் கதை.
பிரவீன் இயக்கத்தில் சமந்தா தயாரித்த படம் `Subham'. சீரியல் பார்ப்பதை மையப்படுத்தி காமெடி ஹாரர் படமாக உருவாகியிருக்கிறது.
அன்பு இயக்கத்தில் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள படம் `படை தலைவன்'. வேலுவின் யானை மணியன் அவனிடமிருந்து பிரிக்கப்படும் சூழல் வர, அதன் பின் நடப்பவையே கதை.
ஷாஹி கபீர் இயக்கத்தில் திலீஷ் போத்தன், ரோஷன் மாத்திவ் நடித்துள்ள படம் `Ronth'. இரவு நேர ரோந்து செல்லும் இரு காவலர்களை பற்றிய கதை.
ரஞ்சித் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Nerariyum Nerathu'. அபர்ணா என்ற பெண்ணின் வாழ்வில் வரும் சிக்கல்களே கதை.
Past Lives படம் மூலம் கரவலாக கவனிக்கப்பட்ட Celine Song தற்போது இயக்கியுள்ள படம் `Materialists'. தனக்கான கச்சிதமான வாழ்க்கை துணை - மோசமான கடந்த கால காதலன் இருவருக்கு இடையே மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்ணின் கதை
Dean DeBlois இயக்கியுள்ள படம் `How to Train Your Dragon'. 2010ல் வெளியான How to Train Your Dragon படத்தின் லைவ் ஆக்ஷன் படமே இது.
David Midell இயக்கத்தில் அல்பசீனோ நடித்துள்ள படம் `The Ritual'. பேய் பிடித்த பெண்ணை குணப்படுத்த முயலும் இரு பாதிரியார்களின் கதை.
Len Wiseman இயக்கத்தில் அன்னா டி அர்மாஸ் நடித்துள்ள படம் `Ballerina'. ஜான்விக் யுனிவர்ஸில் வரும் பெலரினா, தன் தந்தையின் கொலைக்கு பழிவாங்க செல்வதே கதை.