\
ஷங்கர் - ராம் சரண் படத்திற்கு திரைக்கதை.. வசனம் எழுதும் சு.வெங்கடேசன் எம்.பி?

ஷங்கர் - ராம் சரண் படத்திற்கு திரைக்கதை.. வசனம் எழுதும் சு.வெங்கடேசன் எம்.பி?

ஷங்கர் - ராம் சரண் படத்திற்கு திரைக்கதை.. வசனம் எழுதும் சு.வெங்கடேசன் எம்.பி?
Published on: 

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் இணையும் ’ராம் சரண் 15’ படத்தில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி இணைந்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

’இந்தியன் 2’படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன் இசையமைக்கிறார்.

கடந்த 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் எழுத்தாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எம்.பி கலந்துகொண்டார். இந்த நிலையில், ‘ராம் சரண் 15’ படத்திற்கு திரைக்கதை, வசனம் சு.வெங்கடேசன் எம்.பி எழுதுகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com