Su From So
Su From SoOTT Release Date

மெகாஹிட் கன்னட சினிமா `Su From So' ஓடிடி ரிலீஸ் எப்போது?

சுலோச்சனா ஃப்ரெம் சோமேஸ்வரா என்பதன் சுருக்கம்தான் சு ஃப்ரெம் சோ. ஜே பி துமிநாட் இயக்கத்தில் உருவான இப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பிரபல கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி.
Published on

கன்னட சினிமா சமீப காலங்களாக பார்வையாளர்களை ஆச்சர்யபடுத்த தவறியதில்லை. `லூசியா' மூலம் நியூ வேவ் சினிமாக்கள் கொடுக்க துவங்கியது ஆகட்டும், கே ஜி எஃப், காந்தாரா என மிரட்டலான படங்களை கொடுத்ததாகட்டும் புதுமையான பல படங்களை கொடுத்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்கிறது கன்னட திரையுலகம். அப்படி சமீபத்தில் வந்துகலக்கிய ஒரு கன்னட சினிமா `Su From So'. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இப்போது தெரியவந்துள்ளது.

சுலோச்சனா ஃப்ரெம் சோமேஸ்வரா என்பதன் சுருக்கம்தான் சு ஃப்ரெம் சோ. ஜே பி துமிநாட் இயக்கத்தில் உருவான இப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பிரபல கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி. அனுபவம் வாய்ந்த நாடக நடிகர்களை திரட்டி, அவர்களை வைத்து 50 நாட்களில் இப்படத்தை எடுத்துள்ளனர். 

Su from So
Su from SoRaj B Shetty

அசோகா என்ற இளைஞனுக்குள், சுலோச்சனா என்ற பெண்ணின் ஆவி புகுந்துவிட்டது என நம்புகின்றனர் கிராமத்தின். அவருக்கு பேயோட்ட அந்த கிராமத்து மக்கள் எடுக்கும் முயற்சிகளை வைத்து, படு சுவாரஸ்யமான காமெடி படத்தை கொடுத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் மத மூட நம்பிக்கைகளை பகடி செய்யும் இப்படம், பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை சீரியஸாக பேசி இருக்கிறது. படத்தின் உருவாக்கம் + புரமோஷன் என கிட்டத்தட்ட 6 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், இந்திய அளவில் கிட்டத்தட்ட 90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது, உலக அளவில் 120 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. 

ஜூலை 25 வெளியான இப்படத்தின் வரவேற்பை பார்த்ததும், பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்தனர். திரையரங்கில் படத்தை தவறவிட்ட பலரும் ஓடிடியில் இப்படம் எப்போது வெளியாகும் என காத்திருந்தனர். இப்போது ஒருவழியாக இப்படம் செப்டம்பர் 9ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என ஹாட்ஸ்டார் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது படம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com