\
ஸ்டெண்ட் மாஸ்டர் தினேஷ் மருத்துவமனையில் அனுமதி

ஸ்டெண்ட் மாஸ்டர் தினேஷ் மருத்துவமனையில் அனுமதி

ஸ்டெண்ட் மாஸ்டர் தினேஷ் மருத்துவமனையில் அனுமதி
Published on

திடீர் என்று ஏற்பட்ட விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

 ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பா. இவர் இப்போது ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள மால் ஒன்றில் இந்த வாரம் நடைபெற்றது. அப்போது படத்திற்கான சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டன. அந்தச் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஸ்டெண்ட் மாஸ்டர் தினேஷூக்கு அப்போது எதிர்பாராத நேரத்தில் அடிப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து படப்பிடிப்பு வட்டாரத்தை விசாரித்த போது, “ அவருக்கு அடிப்பட்டது உண்மைதான். 50 அடி உயரத்தில் இருந்து குதித்த போது அவரது முழங்காலுக்கு கீழ் அடிப்பட்டுவிட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டுப்போய் சேர்த்துவிட்டோம்” எனத் தெரிவித்தனர்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com