காதலரை கரம்பிடித்த ஹன்சிகா மோத்வானி - வைரலாகும் ஃபோட்டோஸ், வீடியோஸ்!

காதலரை கரம்பிடித்த ஹன்சிகா மோத்வானி - வைரலாகும் ஃபோட்டோஸ், வீடியோஸ்!
காதலரை கரம்பிடித்த ஹன்சிகா மோத்வானி - வைரலாகும் ஃபோட்டோஸ், வீடியோஸ்!

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துமுடிந்துள்ள நிலையில், அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பின்னர், தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து ஜெயம் ரவியின் ‘எங்கேயும் காதல்’, விஜய்யின் ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘அரண்மனை’ உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானார் ஹன்சிகா. கடைசியாக இவர் நடிப்பில் இவரது 50-வது படமாக ‘மஹா’ வெளியானது. மேலும் தமிழ், தெலுங்கு உள்பட சில பெயரிடப்படாதப் படங்களில் ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார்.

கடந்த அக்டோபர் மாதம் இவரது திருமணம் குறித்த தகவல் பரவி வந்தநிலையில், நவம்பர் 2-ம் தேதி தனது வருங்கால கணவரை ஹன்சிகா மோத்வானி அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு தொழிலதிபர் சோஹெல் கத்தூரியா, தனக்கு ப்ரொபோஸ் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ‘இப்போதும், எப்போதும்’ என்று குறிப்பிட்டிருந்தா ஹன்சிகா.

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்ததாகக் கூறப்பட்ட நிலையில், நேற்று தனது காதலரான சோஹெல் கத்தூரியாவை கரம் பிடித்துள்ளார். உறவினர்கள், குடும்ப நண்பர்கள் முன்னிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா பேலஸில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் நடிகை ஹன்சிகா தனது திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com