\
பிரான்சிஸ் கிருபாவிற்கு வாய்ப்பு வழங்கும் ஸ்டூடியோ கிரீன்..!

பிரான்சிஸ் கிருபாவிற்கு வாய்ப்பு வழங்கும் ஸ்டூடியோ கிரீன்..!

பிரான்சிஸ் கிருபாவிற்கு வாய்ப்பு வழங்கும் ஸ்டூடியோ கிரீன்..!
Published on: 

உதவ சென்று சர்ச்சையில் சிக்கிய எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவிற்கு பாடலாசிரியர் வாய்ப்பை வழங்குவதாக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் சென்னை கோயம்பேட்டில் வடமாநில இளைஞர் ஒருவர் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு அருகில் இருந்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை போலீசார் கைது செய்தனர். வடமாநில இளைஞரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற பிரதே பரிசோதனையில் அந்த இளைஞர் இயற்கை முறையில்தான் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அந்த வடமாநில இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு பிரான்சிஸ் கிருபா உதவியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியானதால் பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரான்சிஸ் கிருபாவிற்கு, ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தில் பாடலாசிரியர் வாய்ப்பை வழங்குவதாக ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார். சினிமா துறையில் கலைஞர்களுக்கு பிரச்னை என்பது புதிதல்ல எனவும், அதேசமயம் திறமையானவர்களை வெளிக்கொண்டு வருவது அவசியம் எனவும் ஞானவேல் ராஜா குறிப்பிட்டுள்ளார். பிரான்சிஸ் கிருபா விவகாரத்தில் உண்மை வெளிவர உதவிய மீடியாக்களுக்கும் ஞானவேல் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com