\
அஜித் படத்தை காண விடுப்பு கேட்ட கல்லூரி மாணவர்கள்

அஜித் படத்தை காண விடுப்பு கேட்ட கல்லூரி மாணவர்கள்

அஜித் படத்தை காண விடுப்பு கேட்ட கல்லூரி மாணவர்கள்
Published on: 

அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தினை பார்க்க விடுமுறை கேட்டு நாகையில் கல்லூரி மாணவர்கள் சிலர் துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். ‘பிங்க்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். 

பெண் உரிமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட சிறப்புக்காட்சியைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தினை பார்க்க விடுமுறை கேட்டு நாகையில் கல்லூரி மாணவர்கள் சிலர் துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். படம் பார்க்க, ஒருநாள் மட்டும் விடுப்பு தரும்படி கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்த சம்பந்தப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோரை அழைத்து வந்து தன்னை சந்திக்கும்படி துறைத் தலைவர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com