\
’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம்

’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம்

’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம்
Published on

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் கேரி டக்ளஸ் கர்ட்ஸ் லண்டனில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 78.

ஹாலிவுட்டில் அமெரிக்கன் கிராஃபிடி, ஸ்டார் வார்ஸ், த எம்பயர் ஸ்டிரைக்ஸ் பேக், த டார்க் கிரிஸ்டல், ரிட்டர்ன் ஆப் ஓஸ் உட்பட பல படங்க ளை தயாரித்தவர் கேரி டக்ளஸ் கர்ட்ஸ் (Gary Douglas Kurtz). இவரும் இயக்குனர் ஜியார்ஜ் லுகாஸும் இணைந்து படங்களை உருவாக்கி வந்தனர்.

கருத்துவேறுபாடு காரணமாக, ’த எம்பயர் ஸ்டிரைக்ஸ் பேக்’ பட உருவாக்கத்தின் போது பிரிந்தனர். இவர் தயாரித்த ’ஸ்டார் வார்ஸ்’ படம் உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. அந்தப் படத்துக்கு தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இவர் ’ஸ்டார் வார்ஸி’ன் முதல் இரண்டு படங்களை தயாரித்தார்.

கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த கர்ட்ஸ் அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் லண்டனில் மரணமடைந் தார். இதை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com