\
சூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்!

சூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்!

சூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்!
Published on

ஸ்பைடர்மேன், அயன்மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார். அவருக்கு வயது 95. 

காமிக்ஸ் உலகில் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்பைடர்மேன், அயன்மேன், எக்ஸ்மேன், அவெஞ்சர்ஸ், ஹல்க், ஆன்ட்மேன், தோர் உட்பட பல கேரக்டர்களை உருவாக்கியவர் ஸ்டேன் லீ.

மார்வெல் காமிஸின் அசாத்திய திறன் கொண்ட,  இந்த சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஸ்டேன் லீயின் கதைகள், ஹாலிவுட்டில் திரைப்படங்களாக வெளியாகி பாராட்டை பெற்றன. இந்த கேரக்டர்களை கொண்ட படங்களில் ஸ்டேன் லீ சிறிய கேரக்டரிலும் நடித்துள்ளார்.

மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் எழுத்தாளர், எடிட்டர், பப்ளிஷர், தயாரிப்பாளர், எடிட்டர் ஆகிய பொறுப்புகளை வகித்த ஸ்டேன் லீ, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர், நள்ளிரவு 12 மணியளவில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டேன் லீ-யின் மறைவை அவரது குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com