\
ஜிப்ஸி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தார் ஸ்டாலின்..!

ஜிப்ஸி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தார் ஸ்டாலின்..!

ஜிப்ஸி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தார் ஸ்டாலின்..!
Published on

ஜிப்ஸி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஜீவா நடிப்பில் ராஜூ முருகன் இயக்கியிருக்கும் திரைப்படம் ஜிப்ஸி. பெரும் இழுபறிக்குப் பின்னர் தற்போது சென்சார் வாங்கியிருக்கும் இத்திரைப்படம் வரும் 6’ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் பாடல்கள் என எல்லாமே வைரல் ஹிட் அடித்திருக்கும் நிலையில், சென்சார் கமிட்டியால் நீக்கப்பட்ட காட்சியொன்றினையும் படக்குழு இன்று வெளியிட்டது.

இப்படத்தின் சிறப்புக் காட்சியை திமுக தலைவர் ஸ்டாலின் பார்த்துள்ளார். நேற்று மாலை 6 மணிக்கு நுங்கம்பாக்கம் ஃபோர் பிரேம்ஸ் அரங்கில் ஜிப்ஸி படத்தின் சிறப்புக் காட்சியை துரைமுருகன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு ஆகிய திமுகவின் முக்கிய தலைவர்களுடன் இணைந்து ஸ்டாலின் பார்த்துள்ளார்.

இதற்கு முன்பாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்தை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் பார்த்தார் ஸ்டாலின். அப்படத்தைப் பார்த்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அசுரன், படம் மட்டும் அல்ல பாடம்’ என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com