ஆர்யாவை பின்பற்றும் ஸ்ருஷ்டி டாங்கே

ஆர்யாவை பின்பற்றும் ஸ்ருஷ்டி டாங்கே

ஆர்யாவை பின்பற்றும் ஸ்ருஷ்டி டாங்கே
Published on

நடிகர் ஆர்யாவை போல நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

திரை நட்சத்திரங்களிடம் சைக்கிளிங் மோகம் அதிகரித்து வருகிறது. ஒரு அறைக்குள் உட்கார்ந்து கொண்டு சுற்றி உள்ள நான்கு சுவர்களை பார்த்தபடி எக்சர்ஸைஸ் செய்வது ஒருவிதத்தில் அயர்ச்சியானது. உற்சாகமாக ஓடி ஆடி விளையாடுவதற்கு இணையான உடற்பயிற்சி வேறில்லை. ஆகவே பல நடிகர்கள் இப்போது விடுதலை பெற்று பறவையைபோல வெளி உலகில் சுற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அதனை தமிழ் சினிமா உலகில் முதலில்  தொடங்கி வைத்தவர் நடிகர் ஆர்யா. தனது படப்பிடிப்பிற்கு அவர் காரில் செல்வதை தவிர்த்துவிட்டு சைக்கிளில் போக ஆரம்பித்தார். அவரை பின் தொடர்ந்து விஷால், கலையரசன், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவா என பலர் சைக்கிளிங் போக ஆரம்பித்தனர். 

இந்நிலையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தன் உடற் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். மும்பை கடற்கரையோரம் அவர் 30 கி.மீ தூரம் சைக்கிளிங் செய்த புகைப்படங்களையும் கூடவே அதற்கான வரைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் “இந்தத் தூரத்தை 2 மணிநேரத்தில் கடந்தேன். என்ன ஒரு அனுபவம்?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com