இதற்காகத்தான் பாகுபலியில் ஸ்ரீதேவி நடிக்கவில்லையா?
பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமிதேவி பாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவியைத்தான் முதன் முதலில் அனுகியிருக்கிறார்கள். அவர் மறுக்கவே ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.
பாகுபலி படத்தை ஸ்ரீதேவி ஏன் மறுத்தார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அவர் நடித்த ‘மாம்’ படத்தின் புரமோசன் நடைபெற்று வருகிறது அதில் பேசிய ஸ்ரீதேவி ‘பாகுபலி படத்தில் நடிக்க அழைத்தபோது சொந்த விஷயங்களில் பிஸியாக இருந்துவிட்டேன். ஆகையால் ராஜமவுலி அழைத்தும் அந்தப்படத்தில் என்னால் நடிக்க இயலவில்லை’ எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி.
ஆனால், படக்குழுவினரோ, ஸ்ரீதேவியை அழைத்தபோது அவர் 8 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், அதேபோல், மாநில மொழி படங்களில் சரியாக இருக்காது எனவும் அப்படியே நடித்தால் தன்னுடன் வரும் உதவியாளர்களுக்கும் ஃப்ளைட் டிக்கெட், ஐந்து ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்க ஏற்பாடு ஆகியவற்றை செய்ய வேண்டும் என ஸ்ரீதேவி அடம்பிடித்ததால் ரம்யாகிருஷ்ணனை அந்தப்பாத்திரத்தில் நடிக்க வைத்ததாக தெரிவித்து இருந்தனர்.