திரைத்துறையில் ஐம்பதாவது ஆண்டை நிறைவுசெய்துள்ள ஸ்ரீதேவி அனில் கபூருடன் ’மிஸ்டர் இந்தியா-2’ படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.
சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஸ்ரீதேவி இங்கிலீஸ் விங்கிலீஸ் படம் மூலம் பாலிவுட்டில் ரீ- எண்ட்ரி ஆனார். அவர் நடிப்பில் உருவான ’மாம்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 1987ம் ஆண்டு அனில்கபூருடன் அவர் நடித்த ’மிஸ்டர்.இந்தியா’ ப்ளாக் பூஸ்டர் ஹிட்டடித்தது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. இந்தப்படத்தில் அனில் கபூருடன் மீண்டும் ஜோடி சேர இருக்கிறார் ஸ்ரீதேவி. ரவி உதையவார் இயக்கும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.