பாகுபலி படத்தில் நடிகை ஸ்ரீதேவி நடிக்க மறுத்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’பாகுபலி 2’. இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும் இந்தப் படத்தில், மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தின் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இவரது கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
இயக்குனர் ராஜமவுலி முதலில் அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆனார். ஸ்ரீதேவி நடிக்காததற்கு என்ன காரணம் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை.