\
ஹீரோவுடன் நெருக்கம்: ஸ்ரீதேவி மகளைப் பிரிந்தார் காதலர்

ஹீரோவுடன் நெருக்கம்: ஸ்ரீதேவி மகளைப் பிரிந்தார் காதலர்

ஹீரோவுடன் நெருக்கம்: ஸ்ரீதேவி மகளைப் பிரிந்தார் காதலர்
Published on

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கும் அவரது காதலர் அக்‌ஷத் ரஞ்சனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக இந்தி திரையுலகில் கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் ஜான்வி, விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். ஜான்வியின் நண்பர் அக்‌ஷத் ராஜன். இருவரும் ஒன்றாகச் சுற்றி வந்தனர். ஸ்ரீதேவி குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தார் அக்‌ஷத். இருவரும் காதலித்து வருவதாக இந்தி திரைப்படத் துறையில் கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துள்ளனர். இதற்கு காரணம் ஜான்வி, இந்தி நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷானுடன் நெருக்கமாக பழகி வருவதுதான் என்கிறார்கள். இஷான், ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கும் ’பியாண்ட் த கிளவுட்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com