\
இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்!

இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்!

இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்!
Published on

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இப்போது. இதையடுத்து தெலுங்கு திரையுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பட வாய்ப்பு தருவதாகக் கூறி தெலுங்கு திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர் அடுத்து தமிழ்த்திரையுலகினர் மீதும், பாலியல் புகார்களை கூறினார். இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பரப்பரப்பு புகார் கூறினார். இதற்கிடையே அவர் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் அவரே நடிக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கு பட இயக்குனர் ராம்கி மீது புது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த இயக்குனர் ஆபாசமாக பேசிய வாட்ஸப் சாட்களை வெளியிட்டுள்ள ஸ்ரீரெட்டி, ‘இதை எனக்கு எஸ்.எம் என்பவர் அனுப்பினார் என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டு அவர் பற்றிய புகாரை தெலுங்கில் குறிப்பிட்டுள்ளார். அதில் பாலியல் தேவைக்கு இளம் பெண்களை அவர் கேட்டதாகவும் அவரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

தெலுங்கு திரையுலகினர் பற்றி ஸ்ரீரெட்டி தெரிவித்து வரும் புகார்களுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே சேனல் விவாதங்களில் ராம்கி பேசி வருகிறார். இந்நிலையில் அவர் மீதே புகார் கூறப்பட்டிருப்பதால், தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com