’வீட்டை காலி பண்ண சொல்றார் ஓனர்’: அரை நிர்வாண நடிகை அப்செட்!
அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டியை, வீட்டை காலிபண்ணுமாறு வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார். அந்தத் திரைப் பிரபலங்களின் பெயர் பட்டியலை ஸ்ரீ லீக்ஸ் என்ற பக்கத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகம், அவர் நடிப்பதற்கான அங்கீகார அட்டையை ரத்து செய்துவிட்டது. இவருடன் பணியாற்ற மாட்டோம் என்று கூறிவிட்டது.
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள நடிகர் சங்கத்துக்கு எதிரே நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். இதுபற்றி ஸ்ரீரெட்டி கூறும்போது, ‘எனது ஹவுஸ் ஓனர், போன் செய்து வீட்டை காலி பண்ண சொல்லிவிட்டார். என்ன அருமையான மனிதர் அவர். ஐஏஎஸ் அதிகாரி மாதிரி நடந்துகொள்கிறார்’ என்று கூறியுள்ளார்.