\
கிளாமராக நடிக்க இப்போ ரெடி: மனம் மாறினார், ஊதா கலர் ரிப்பன்!

கிளாமராக நடிக்க இப்போ ரெடி: மனம் மாறினார், ஊதா கலர் ரிப்பன்!

கிளாமராக நடிக்க இப்போ ரெடி: மனம் மாறினார், ஊதா கலர் ரிப்பன்!
Published on

ஹோம்லி கேரக்டர்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா இப்போது கிளாமராக நடிக்க முடிவு செய்துள்ளார்.

தமிழில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’வெள்ளைக்கார துரை’, ’ஈட்டி’, ’பெங்களூர் நாட்கள்’, ’பென்சில்’, ’மருது’ உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். ஹோம்லி கேரக்டர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், கிளாமராக நடிக்க மறுத்து வந்தார். 

எனது உடல்வாகுக்கு கிளாமர் ரோல் செட்டாகாது என்று கூறினார். விளைவு, அவருக்கு புதிய வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தனது கொள்கையை தளர்த்தி இருக்கிறார் ஸ்ரீ திவ்யா. அதாவது கிளாமருக்கு இறங்கி வந்திருக்கிறார். கிளாமராக நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அவர் புதிய போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com