Sreeleela about trolls of her
SreeleelaUstad Bhagat Singh

"என்னைப் பற்றிய ட்ரோல்ஸ் பார்த்து அழுதிருக்கிறேன்!" - ஸ்ரீலீலா | Sreeleela

எனக்கு நடிக்க வந்த புதிதில் ட்ரோல்ஸ் குறித்து பயம் இருந்தது. நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது சமூக வலைதளங்களில் நிறைய நெகட்டிவ் கமென்ட்களும், ட்ரோல்களும் வரும்.
Published on

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயன் நடித்த `பராசக்தி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், கார்த்திக் ஆர்யன் நடிப்பில் அனுரங் பாசு இயக்கும் படம் மூலம் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். தற்போது இவர் பவன் கல்யாண் நடித்துள்ள `உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷனுக்காக பேட்டிகளும் கொடுத்து வருகிறார்.

Sreeleela
Sreeleela

அப்படியான ஒரு பேட்டியில், AI பயன்படுத்தி நடிகைகள் புகைப்படங்கள், வீடியோக்கள் வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட "இது அறிமுக நடிகைகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய ஒன்று. இப்படியான விஷயங்களில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இது பற்றி நான் முன்னரும் பேசி இருக்கிறேன். இதனால்தான் என்னுடைய அம்மா சமூக வலைதளங்களில் நான் இருக்கக்கூடாது என விரும்புகிறார். ஏனென்றால், உங்களுடைய குடும்பத்தினர் இப்படியான விஷயங்களைப் பார்ப்பது கடினமான ஒன்று. நிறைய நடிகைகளும் இதுபற்றி பேசி இருக்கிறோம். ஆனால் இப்போது இதனை எதிர்கொள்ளும் அளவு தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலும், இதற்கான தீர்வு ஒன்றிலும் நான் பணியாற்றி வருகிறேன். அதற்கான ஒரு மென்பொருளை உருவாக்கி வருகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் அதனை வெளியிட உள்ளோம். அது வேலை செய்யும் என நம்புகிறேன்" என்றார்.

Sreeleela about trolls of her
1000 கோடி நிச்சயம், 2000+ கோடி லட்சியம்... வெறித்தனமான வசூல் வேட்டையில் துரந்தர் 2! | Dhurandhar 2

ஆன்லைன் ட்ரோல்ஸ் குறித்து கேட்டதும், "எனக்கு நடிக்க வந்த புதிதில் ட்ரோல்ஸ் குறித்து பயம் இருந்தது. நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது சமூக வலைதளங்களில் நிறைய நெகட்டிவ் கமென்ட்களும், ட்ரோல்களும் வரும். ஆரம்பத்தில் அது மிகவும் மனதைப் பாதித்திருக்கிறது. பலமுறை கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன்.

Sreeleela
SreeleelaUstad Bhagat Singh

ஒருகட்டத்தில், என் அம்மாவிடம், நமக்கு இந்த சினிமா வேண்டாம், மீண்டும் கல்லூரிக்குச் சென்று படிப்பைத் தொடரலாமா" என்றுகூட சொல்லி இருக்கிறேன். தற்போது அதிலிருந்து மீண்டு வந்து என்னுடைய வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகிறேன்" என்றார் ஸ்ரீலீலா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com