\
ரொமானியாவில் ’ஸ்பைடர்’ டீம்!

ரொமானியாவில் ’ஸ்பைடர்’ டீம்!

ரொமானியாவில் ’ஸ்பைடர்’ டீம்!
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஸ்பைடர் பட டீம், பாடல் காட்சிக்காக ரொமானியா சென்றுள்ளது. 

தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் படம், ‘ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். பரத், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் பிரீத் சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். 

இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருந்தது. அந்த டூயட் பாடல் காட்சிக்காக, மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங் உட்பட படக்குழுவினர் இப்போது ரொமேனியா சென்றுள்ளனர். அங்கு படப்பிடிப்பு நடந்துவருகிறது. அது முடிந்ததும் படப்பிடிப்பு நிறைவடைகிறது. செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகிறது. அதற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com