சினிமா
தள்ளிப்போகிறது ஏ.ஆர்.முருகதாஸின் ’ஸ்பைடர்’ ரிலீஸ்
தள்ளிப்போகிறது ஏ.ஆர்.முருகதாஸின் ’ஸ்பைடர்’ ரிலீஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் மகேஸ்பாபு நடித்த ஸ்பைடர் ரிலீஸ் தாமதமாக செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் எந்தப் படங்களையும் இயக்கவில்லை. அவர் தமிழில் கடைசியாக இயக்கிய படம் 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கத்தி. அதன் பிறகு ஹிந்திக்கு சென்ற அவர் சோனாக்ஷி சின்கா நடித்த அகிரா படத்தை இயக்கினார். அதனை அடுத்து மகேஸ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஸ்பைடர் படத்தை தொடங்கினார்.
படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வந்தது. பாடல் காட்சிகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் ஜூனில் முடித்து விட்டு, ஆகஸ்டில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், தற்போது செப்டம்பர் மாதம் ஸ்பைடர் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.