\
புகை இல்லை... மது இல்லை...ஸ்பைடர் ஸ்பெஷல்

புகை இல்லை... மது இல்லை...ஸ்பைடர் ஸ்பெஷல்

புகை இல்லை... மது இல்லை...ஸ்பைடர் ஸ்பெஷல்
Published on: 

மகேஷ்பாபுவின் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஸ்பைடர் படத்தில் குடிப்பது போன்றோ சிகரெட் பிடிப்பது போன்றோ  ஒரு காட்சி கூட இடம் பெறவில்லை. 

தமிழில் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்துள்ள திரைப்படம் ஸ்பைடர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படம், ரூ.110 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. விநியோக உரிமையின் மூலம் மட்டுமே ரூ.150 கோடி வசூலைப் படைத்துள்ள இந்தப் படத்தில், குடிப்பது மற்றும் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் ஒன்று கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஸ்பைடர் படத்திற்கு, சென்னையிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளது. அத்துடன் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ரசிகர்கள் வரவேற்பையும், வசூலை அள்ளிக் குவிப்பதால் இதன் 2வது எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com