”சிங்கம் எப்பவுமே சிங்கம்தான்”: சினிமாவில் கமல் 62 ஆண்டுகள்.. ‘விக்ரம்’ போஸ்டர் வெளியீடு

”சிங்கம் எப்பவுமே சிங்கம்தான்”: சினிமாவில் கமல் 62 ஆண்டுகள்.. ‘விக்ரம்’ போஸ்டர் வெளியீடு
”சிங்கம் எப்பவுமே சிங்கம்தான்”: சினிமாவில் கமல் 62 ஆண்டுகள்.. ‘விக்ரம்’  போஸ்டர் வெளியீடு

கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 62 ஆண்டுகள் ஆனதையொட்டி விக்ரம் படம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முகங்களை வெளிப்படுத்தும் நடிகர் கமல்ஹாசன் கடந்த 1960 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில்தான் அறிமுகமானார். இந்தப் படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதிதான் வெளியானது. நாளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி என்பதால் கமல் ரசிகர்கள், சிறப்பிக்கும் விதமாக #62YearsOfKamalism என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல் ஸ்டைலாக கழுத்தில் கத்தியுடன் இருக்கும் பின்பக்க புகைப்படத்தை வெளியிட்டு கமல்ஹாசன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக,’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com