\
நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமனம்!

நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமனம்!

நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமனம்!
Published on

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் 23- ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலையும் தேர்தல் தொடர்பான அறிவிப்பையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. இந்த விசாரணை நாளை நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையே, நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு இன்று நியமித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com