\
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நாளை நல்லடக்கம்.!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நாளை நல்லடக்கம்.!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நாளை நல்லடக்கம்.!
Published on

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நாளை காலை வரை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பி. தான் நலமுடன் இருப்பதாகவும், லேசான அறிகுறி ஏற்பட்டதால் சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நாளை காலை வரை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com