எஸ்.பி.பி இருக்கும் அறையில் அவர் பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை

எஸ்.பி.பி இருக்கும் அறையில் அவர் பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை

எஸ்.பி.பி இருக்கும் அறையில் அவர் பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை
Published on

பாடகர் எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவர் பாடிய பாடல்கள் மருத்துவமனை அறையில் ஒலிக்க விடப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், மருத்துவமனையின் 6 ஆவது மாடியில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி.பி.க்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசத்தின் அளவும் குறைக்கப்பட்டது.

எஸ்.பி.பி.க்கு அளிக்கப்படும் சிசிச்சைகள் நல்ல பலனைத் தருவதாக மருத்துவர்களும் கூறினர். சிகிச்சையின் ஒரு பகுதியாக, எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் ஒலிக்க விடப்படுகின்றன. எஸ்.பி.பி. இசைப்பிரியர் என்பதால் பாடல்களை ஒலிக்க செய்யும் முறை, நல்ல பலனைத் தரும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com