\
”எஸ்.பி.பி உடல்நிலை சீராக வேண்டியவர்களுக்கு இன்று நல்ல நாள்”- மகன் எஸ்.பி. சரண்

”எஸ்.பி.பி உடல்நிலை சீராக வேண்டியவர்களுக்கு இன்று நல்ல நாள்”- மகன் எஸ்.பி. சரண்

”எஸ்.பி.பி உடல்நிலை சீராக வேண்டியவர்களுக்கு இன்று நல்ல நாள்”- மகன் எஸ்.பி. சரண்
Published on

பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பால சுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விரைவில் குணம்பெற்று வர அனைவரும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த பிரார்த்தனைக்கு பலனாக அவரிடம் முன்னேற்றம் தெரிவதாக அவருடைய மகன் எஸ்.பி.சரண் இன்று ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

”எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் தெரிவதாகவும், 90% மயக்க நிலையில் இருந்து மீண்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்களுக்கும், சிகிச்சைக்கும் ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளார். அவருடைய சிகிச்சை குறித்த செய்தியை எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும் இன்று நல்ல நாள். அவருக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் , எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, விரைவில் குணம்பெற்று வர மேலும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com