`திடீர் அதிர்ச்சிகளையே வாழ்க்கை கொடுக்கிறது’- கௌசிக் மறைவுக்கு உருகும் தென்னிந்திய சினிமா

`திடீர் அதிர்ச்சிகளையே வாழ்க்கை கொடுக்கிறது’- கௌசிக் மறைவுக்கு உருகும் தென்னிந்திய சினிமா
`திடீர் அதிர்ச்சிகளையே வாழ்க்கை கொடுக்கிறது’- கௌசிக் மறைவுக்கு உருகும் தென்னிந்திய சினிமா

தமிழ்நாட்டில் இயங்கிவரும் பல்வேறு செய்தி நிறுவனங்களில் சினிமா பிரிவில் கண்டெண்ட் ரைட்டராக, தொகுப்பாளராக பணியாற்றி வந்த கௌசிக், நேற்றைய தினம் திடீர் மாரடைப்பால் மரணித்திருந்தார்.

இவரது மறைவுக்கு, தென்னிந்திய திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முக்கியமான சில பிரபலங்களின் இரங்கல் செய்தி:

* விஜய் தேவரகொண்டா: உங்களை நினைத்து பிராத்திக்கிறேன். கௌசிக், உங்களை மிஸ் செய்கிறோம்!

* ராஷ்மிகா மந்தனா: இச்செய்தி, மனமுடைய வைக்கிறது. மிக மிக நல்ல மனிதர் கௌசிக்!

* தனுஷ்: மிகவும் மனமுடைய வைக்கும்படி இருக்கிறது இச்செய்தி. வெகுவிரைவில் சென்றுவிட்டீர்கள். அவருடைய நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

* கீர்த்தி சுரேஷ்: இந்தச் செய்தியைக் கேட்டதிலிருந்து எனக்கு வார்த்தையே வரவில்லை. இப்போதுவரை செய்தியை நம்ப முடியாமல் இருக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக என் இரங்கல்களும், ஆழ்ந்த அனுதாபங்களும். நீங்கள் இனி இல்லை என்பதை நம்ப முடியவில்லை கௌசிக்!

* வெங்கட்பிரபு: நம்ப முடியவேயில்லை. இரண்டு நாள்களுக்கு முன்னர் கூட கௌசிக்கிடம் பேசினேன். வாழ்க்கை எப்படியானது என்பதை யூகிக்கவே முடியாதுபோல. இந்த உண்மை மிக மோசமாக இருக்கிறது. சீக்கிரமாக சென்றுவிட்டாய் கௌசிக். உன் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

* மிஷ்கின்: இச்செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன். மிகவும் நல்ல மனிதர், மிகவும் அறிவாளி, எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவரான கௌசிக், நம்மை விட்டு பிரிந்துவிட்டாரா? வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி எனக்கு எழுகிறது. கௌசிக்கின் குடும்பத்தினரும் நண்பர்களும் எப்படி அவரது இழப்பிலிருந்து வெளியே வருவார்கள் என்று தெரியவில்லை. அவர்களை போல நானும் உன்னை பெரிய அளவில் இழக்கப் போகிறேன்

* துல்கர் சல்மான்: இச்செய்தி உண்மையாக இருக்கக்கூடாதென்றே நான் விரும்புகிறேன். கௌசிக், உங்கள் குடும்பம் இப்போது என்ன மாதிரியான சூழ்நிலையில் இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. நாம் ஒருவரையொருவர் பெரும்பாலும் ட்விட்டர் மூலமாகவும் சில தனிப்பட்ட தொடர்புகள் மூலமாகவும் அறிவோம். நீங்கள் எப்போதும் எனக்கு மிகுந்த அன்பையும் ஆதரவையும் காட்டி வந்திருக்கின்றீர்கள். வாழ்க்கை மிகவும் சிறியதென்று இப்போது புரிகிறது. நல்ல சினிமாக்களுக்காக எப்போதும் நீங்கள் துணை நின்றிருக்கீர்கள். உங்களுடைய ஊக்கத்திற்கும் அன்புக்கும், என் நன்றி. இந்த ட்வீட்களை என்னால் சரியாக கோர்வையாக சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு இந்த செய்தி என்னை தனிப்பட்ட முறையில் தாக்குயுள்ளது.

* கார்த்தி: இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு கூட கௌசிக்கை செய்தியாளர் சந்திப்பில் சந்தித்தேன். அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

* கார்த்திகேயா: சகோதரர் கௌசிக்கின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது. வலிமை திரைப்பட ப்ரமோஷனின்போது, கௌசிக்கை சந்தித்திருந்தேன். மிகவும் நேர்மறையான நபராக இருப்பார். எப்போதும் நமக்கு உறுதுணையாகவும் இருப்பார். மிக விரைவில் நம்மை விட்டு சென்றுவிட்டார்.

* ஹரிஷ் கல்யாண்: கௌசிக் இறந்தது பற்றிய செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிகவும் அன்பான மற்றும் நட்பான நபர் கௌசிக். வாழ்க்கை சில நேரங்களில் நியாயமற்றதாகிவிடுகிறது. அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் அன்பானவர்களுக்கும் என் அனுதாபங்கள்.

* அதுல்யா ரவி: கௌசிக்கின் திடீர் மறைவு செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். மிகவும் இளமையான மற்றும் மிகவும் கனிவான உள்ளம் கொண்டவர் அவர், எப்போதும் நேர்மறையான வார்த்தைகளையே பேசுவார். கடவுள், உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எல்லா பலத்தையும் கொடுக்கட்டும்.

* சாயிஷா: கௌசிக், எனது அன்பான நண்பர்... மிகவும் இனிமையானவர், மிகவும் மென்மையானவர், கனிவானவர்! இந்த இழப்பை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரது தாய் மற்றும் சகோதரருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். நான் பெறும் மோசமான செய்தியாக இது இருக்கிறது.

என இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர்களை போலவே இயக்குநர்கள் மோகன் ராஜா, சக்தி சௌந்தர ராஜன், நடிகர்கள் ஜெயம் ரவி, எஸ்.ஜே.சூர்யா, நிவின்பாலி, ராகவா லாரன்ஸ், விக்ரம் பிரபு, சசிகுமார், நடிகைகள் அஞ்சலி, ரித்திகா சிங், அதிதி ராவ், இசையமைப்பாளர்கள் ஜிப்ரான், டி.இமான், தமன் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும் பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com