\
ஜன.20-யில் நடிகர் சங்கம் உண்ணாவிரதம்

ஜன.20-யில் நடிகர் சங்கம் உண்ணாவிரதம்

ஜன.20-யில் நடிகர் சங்கம் உண்ணாவிரதம்
Published on: 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரக நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 20 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி, சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக பல திரைத்துறை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரக ஜனவரி 20 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்குபெறுவர். தமிழர் பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்களுக்கு என்றும் உறுதுணையாக நிற்போம் எனக் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com