இட்லி சாம்பாரும் சூப்பர் ஸ்டாரும் : அஜித் வில்லனின் அடடா சர்டிபிகேட்
தமிழில், எல்லாம் அவன் செயல், அழகர் மலை, புலி வேஷம், வைகை எக்ஸ்பிரஸ் உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஆர்.கே.
இவர், வி கேர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் ஹேர் டைக்கு பதிலாக விஐபி ஹேர்
கலர் ஷாம்பூ என்ற ஒன்றைத் தயாரித்துள்ளது. இதன் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதன் விளம்பர தூதராக உள்ள இந்தி நடிகரும், அஜீத்தின் ’விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்தவருமான விவேக் ஒபராயும் இந்தி நடிகர் சமீர் கோச்சரும் இதை அறிமுகப்படுத்தினர்.
விழாவில் நடிகர் விவேக் ஓபராய் பேசும்போது, 'இன்று காலை உணவாக ரசித்து சாப்பிடும் இட்லி, சாம்பாராகட்டும், உலகம் முழுவதும் அறியப்படுகிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகட்டும், தென்னிந்தியா எப்போதுமே மிகச்சிறந்த தயாரிப்புகளைத் தந்துள்ளது. சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. இங்கு எனக்கு அதிகமான உறவினர்கள் இருக்கிறார்கள். ஏன், என் அம்மா, மனைவி எல்லோருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். என் அம்மா கோவையை சேர்ந்தவர்' என்றார்.
ஆர்கே பேசும்போது, ' எங்களது இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்திய அளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்ல ஒருவர் தேவைப்பட்டார். அதனால் விவேக் ஓபராயை விளம்பர தூதராக நியமித்திருக்கிறோம். இந்த தயாரிப்புக்காக ஒரு வருடம் எந்தப் திரைப்படத்திலும் கூட நடிக்கவில்லை. இனி இதை மக்களிடம் சேர்த்துவிட்டு
பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். அந்தப் படம் பலரின் கண்களை திறக்கும் படமாக இருக்கும். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்'
என்றார்.
விழாவில் இந்தி நடிகரும் நடிகரும் ஐபிஎல்-மேன் என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துகொண்டார்.

