பாலா இயக்கும் படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா?

பாலா இயக்கும் படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா?

பாலா இயக்கும் படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா?
Published on

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

'ஜெய்பீம்' திரைப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கும் படத்தை சூர்யா தயாரித்து நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதில் ஒரு கதாபாத்திரத்தில் வேறு நடிகரை நடிக்க வைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும் குறைந்த காட்சிகளே என்பதால் சூர்யாவை நடிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒரு படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- செந்தில் ராஜா

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com