அறிமுக இயக்குநரின் படத்தில் இணையும் சமந்தா ?

அறிமுக இயக்குநரின் படத்தில் இணையும் சமந்தா ?
அறிமுக இயக்குநரின் படத்தில் இணையும் சமந்தா ?

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்துக்குப் பின்னர் அறிமுக இயக்குநரின் படத்தில் சமந்தா தமிழில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த சமந்தா, திருமணத்திற்குப் பின்னர் அதிகமாக தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. 2017ல் நாக சைதன்யாவை திருமணம் செய்த பின்னர், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த அவர், வேறெந்த தமிழ் படத்திலும் அதன்பின் நடிக்காமல் இருந்தார்.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநரான கெளதம் என்பவரின் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க திட்டமிட்டிருந்த சமந்தா, இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்துள்ளார். அப்போது கெளதம் என்ற அறிமுக இயக்குநர் கூறிய கதையில் ஆர்வமடைந்த அவர், உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம் எனப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com