பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்களா? - சுவாரஸ்ய அப்டேட்

பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்களா? - சுவாரஸ்ய அப்டேட்

பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்களா? - சுவாரஸ்ய அப்டேட்
Published on

நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. பீஸ்ட் திரைப்படத்தில் முக்கியமான காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் இத்திரைப்படத்தில் மூன்று வில்லன்கள் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த மூன்று வில்லன்களுக்கான கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி வருவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. துப்பாக்கி, கத்தி போன்ற விஜய் படங்களில் இடம்பெற்ற வில்லன் கதாபாத்திரம் போல் பவர்ஃபுல்லாக இல்லையென்றாலும், சுவாரசியமாக இருக்கும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்தப் படத்திற்கான முழு படப்பிடிப்பையும் நவம்பர் மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com