\
ரஜினி பேரனின் பிறந்தநாளில் ஒன்றுசேர்ந்த தனுஷ்- அனிருத்

ரஜினி பேரனின் பிறந்தநாளில் ஒன்றுசேர்ந்த தனுஷ்- அனிருத்

ரஜினி பேரனின் பிறந்தநாளில் ஒன்றுசேர்ந்த தனுஷ்- அனிருத்
Published on: 

ரஜினியின் பிறந்தநாள் புகைப்படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.

இன்று ரஜினியின் பேரனும் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்தின் மகனுமான வேத் கிருஷ்ணாவிற்கு பிறந்தநாள். மூன்றாம் ஆண்டை இன்றோடு அவர் நிறைவு செய்கிறார். அதனையொட்டி செளந்தர்யா வீட்டில் அதற்கான விழா ஏற்பாடாகி இருந்தது. அதில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் தனது தாயாருடன் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டிருக்கிறார். சில வருடங்களாகவே தனுஷும் அனிருத்தும் சந்தித்து கொள்ளாமல் இருந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டிருப்பது பலவித சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தனது மகன் பிறந்தநாள் குறித்து ட்விட்டரில் செளந்தர்யா, “மூன்று வருடங்களுக்கு முன்பாக என் வாழ்க்கைகுள் வந்த ஏஞ்சல். என்னுடைய அதிசயம் என் குழந்தை வேத்கிருஷ்ணா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிறந்தநாள் விழாவிற்கான படங்கள் ட்விட்டரில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com