சினிமா
அப்பா அரசியலில் ஈடுபட்டால் ஆதரிப்போம்: சவுந்தர்யா ரஜினி
அப்பா அரசியலில் ஈடுபட்டால் ஆதரிப்போம்: சவுந்தர்யா ரஜினி
அப்பா அரசியலில் ஈடுபட்டால் குடும்பத்தினர் அனைவரும் ஆதரிப்போம் என சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், கமல் தங்களது குடும்ப நண்பர் என்றும் அவர் நன்றாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவதாகவும் தெரிவித்தார். கமல் என்ன செய்தாலும் சரியாக செய்வார் என்றும் கூறினார். தனது தந்தை ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால் குடும்பத்தினர் அனைவரும் ஆதரிப்போம் என்றும் சவுந்தர்யா தெரிவித்தார்.
ரஜினிக்கு அரசியல் வருவாரோ மாட்டாரோ என பலதரப்பில் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் ரஜினியின் மகள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.